தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார்
ADDED : 115 days ago
மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் 2012ல் தேசிய விருதுகளை பெற்ற தட்டத்தின் மறயத்து என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு என கொஞ்ச நாட்கள் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும் ரசிகர்களை ஆச்சரியப்படும் விதமாக தற்போது கேரள கலையான களறி பயிற்று கலையை கற்று வருகிறார் இஷா தல்வார்.
கேரளாவில் உள்ள பிரபல களரி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து களரி பயிற்சி எடுத்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது ஒரு புதிய கலையை கற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவா அல்லது அவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காகவா என்பது பற்றிய விவரம் எதுவும் அவரிடமிருந்து வெளியாகவில்லை.