உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ்

பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ்

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தபோது அவர் இயக்கிய பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். ஆனால் அவர் இயக்குனரான பிறகு பிறர் கதைகளுக்கு திரைக்கதை எழுதியதில்லை. சில படங்களுக்கு வசனம் எழுதி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது உதவியாளராக இருந்த ஆர்.கோவிந்தராஜ் என்பவர் 'கண்ண தொறக்கணும் சாமி' என்ற படத்தை இயக்கினார். முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற பாடலே தலைப்பாக வைக்கப்பட்டது. இந்த படத்தின் கதை 'நானும் மா ஆவிடா' என்ற தெலுங்கு படத்தின் கதையை தழுவியது. இந்த கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை எழுதிக் கொடுத்தார் கே.பாக்யராஜ்.

தன் உதவியாளர் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்தார். இந்த படம் வரவேற்பை பெற்றாலும் கோவிந்தராஜ் அதன் பிறகு ஏனோ படம் இயக்கவில்லை.

இந்த படத்தில் சிவகுமார், ஜீவிதா, சோ, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், இளையராஜாவும், கங்கை அமரனும் இணைந்து இசை அமைத்திருந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !