ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு
ADDED : 112 days ago
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ஹேஷம் அப்துல் வகாப் இசையமைப்பில், ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி கேர்ள் பிரண்ட்'. இப்படத்தை நவம்பர் 7ம் தேதி வெளியிடுவதாக சற்று முன் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது. கொஞ்சம் தாமதமான உருவாக்கத்தால் பட வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. தற்போது அனைத்து வேலைகளையும் முடித்து படத்தின் வெளியீட்டை அறிவித்துள்ளார்கள்.
இந்தப் படத்தை ராஷ்மிகா பெரிதும் நம்பியுள்ளார். அவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் இது. இப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.