உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ?

'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ?

அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டியூட்'. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்., 17ல் வெளியாக உள்ளது.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தைத் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் பெற்றிருந்தது. ஆனால், ஏதோ கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் கொடுத்த உரிமையை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டதாம். அடுத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.

மைத்ரி தயாரிப்பில் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்தான். அப்படம் தமிழகத்தில் மட்டும்தான் நல்ல வசூலைக் குவித்தது. அப்படியிருக்கும் போது அந்த நிறுவனத்திடமிருந்து 'டியூட்' படத்தைத் திரும்பப் பெற்றிருப்பது திரையுலகத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இதற்கு முன்பு வந்த 'லவ் டுடே' 100 கோடி வசூலையும், 'டிராகன்' படம் 150 கோடி வசூலையும் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !