உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது

கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலையை கந்தன் மலை என்று ஒரு சாரரும், அது சிக்கந்தர் மலை என்று ஒரு சாரரும் கூறியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை மையமாகக் கொண்டு கந்தன் மலை என்ற பெயரில் தற்போது ஒரு படம் உருவாகி இருக்கிறது. அதில், பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் முறுக்கு மீசை, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் தோன்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. அந்த போஸ்டரில் அவருக்கு தர்ம போராளி என்றும் பட்டப்பெயர் சூட்டியிருந்தார்கள். இந்த நிலையில் இன்று கந்தன் மலை படத்தின் முதல் பாடலான கந்தன் மலையை தொட்டுப் பாரு என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதை எச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

N Sasikumar Yadhav
2025-10-05 15:54:52

தர்ம போராளி இந்துமத காவலன் H ராஜா பெயரை கேட்டாலே சில பாலைவன மதத்தினர் கதறுகிறானுங்க . ஏனென்றால் H ராஜாவால் பாலைவன மதமாற்ற வியாபாரம் தடுக்கப்படுகிறது


மன்மதன், london
2025-10-05 04:34:52

ஐயோ... நான் நடிக்கலைங்கோ... அது என் admin


மனிதன், riyadh
2025-10-04 20:40:13

போராளியா?? ஹாஹ்ஹ்ஹஹ்ஹா கோமாளி....(நானா, நான் சொல்லவே இல்லங்குறேன்)