உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு

பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு


நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடமாக கலை சேவை செய்து வருகிறார். இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து பல ராணுவப் படங்களில் நடித்ததால் கவுரவ லெப்டினன்ட் பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது வாழ்நாள் சாதனையை போற்றும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கையால் விருதையும் பெற்றார் மோகன்லால்.

இந்த நிலையில் கேரளாவிற்கு இந்த விருது மூலம் பெருமை தேடித்தந்த மோகன்லாலை கவுரவிக்கும் விதமாக கேரள மாநில அரசு ‛லால் சலாம்' என்கிற பெயரில் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பலரும் திரையுலரை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மோகன்லாலை வாழ்த்தினர். இப்படி ஒரு விழா நடத்தி தன்னை கவுரவித்த கேரள அரசுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !