உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன்

ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன்

கடந்த 2009ம் ஆண்டில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடித்து வெளியான படம் 'சிவா மனசுல சக்தி'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜீவா, எம்.ராஜேஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் என்கிற பிரபல விநியோகஸ்தர் தயாரிக்கின்றார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா ரங்கநாதன் தான் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்களாக நடிக்க இப்போது டிரெண்டிங்கில் உள்ள பிரபலங்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !