தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்?
ADDED : 8 hours ago
நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவரது 54வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கதாநாயகியாக நடிக்க ‛கோட்' பட நாயகி மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம். இதனால் இப்போது பூஜா ஹெக்டே உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தனுஷ் 55 படத்தில் யார் கதாநாயகி என்கிற குழப்பம் நீடிக்கிறதாம்.