உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண்

லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிக்கும் டீசல் படம், தீபாவளிக்கு வருகிறது. படம் குறித்தும் ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டி :

படத்தின் தலைப்பு டீசல் என்று இருந்தாலும், இது அதன் மூலப்பொருளான குரூடு ஆயில் அரசியல், அதன் பின்னணியில் நடக்கும் குற்றங்களை பேசுகிறது. ஒரு காலத்தில் வட சென்னையில் கப்பலில் இருந்து, டேங்கில் இருந்து பைப் மூலமாக குரூடு ஆயில் சுத்திகரிக்க எடுத்து வரப்பட்டது. அதை திருடி, வேறு இடத்துக்கு கடத்தி லாபம் சம்பாதித்தனர் ஒரு பிரிவினர். அதை விரிவாக படம் பேசுகிறது.

நான் வட சென்னை மீனவனாக நடித்து இருக்கிறேன். இந்த பிரச்னையால் என்னனென்ன பாதிப்பு, அதை எப்படி தடுக்கிறேன் என்ற ரீதியில் கதை நடக்கிறது. வினய், விவேக் பிரசன்னா உள்ளிட்ட 4 பேர் வில்லன்கள். நான் முதல்முறையாக ஆக் ஷன் கதையில் நடித்து இருக்கிறேன். மீனவனாக நடித்தபோது கைலி தான் பெரும்பாலான காட்சிகளில் காஸ்ட்யூம், என் ஸ்கீன் டோனையும் டார்க் ஆக்கி நடிக்க வைத்தார் இயக்குனர்.

வட சென்னையில் ராயபுரம், காசிமேடு மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஆயில் பைப் லைன் இப்போது இல்லை. ஆகவே செட் போட்டு படமாக்கினோம். நான் கொஞ்சம் மீன் பிடிக்க, லான்ச் ஓட்ட கற்றுக் கொண்டேன். ஹீரோயின் அதுல்யா ரவி லாயராக வருகிறார். அவர் கேரக்டர் இடைவேளைக்குபின் திருப்பு முனையை ஏற்படுத்தி கதை ஓட்டத்தை அதிகரிக்க வைக்கும்.

திபு நிபுணன் இசையமைத்து இருக்கிறார். பாடல் முன்பே பிரபலம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் நடித்த படத்தை பார்த்து ரசித்து இருக்கிறேன். இந்த தீபாவளிக்கு என் படம் வருவது மகிழ்ச்சி. பார்க்கிங், லப்பர் பந்து வெற்றிக்குபின் வரும் இந்த படம் எனக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறேன். இப்போது குரூடு ஆயிலை திருட முடியாது, பைப் லைன் நவீனமயாக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த கதை 2014ல் முடிந்துவிடும்'.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !