உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா?

சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா?


எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்துக்கு 'அரசன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். தக்லைப் படத்துக்குபின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல் வந்தது. ஏனோ அது நடக்கவில்லை. அடுத்து தேசிங்கு பெரியசாமி, 'பார்க்கிங்' பாலகிருஷ்ணன், 'டிராகன்' அஸ்வத் மாரிமுத்து படங்களில் அவர் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த 3 படங்களும் தொடங்கப்படவில்லை.

அடுத்து அவர் அவர் 'வடசென்னை 2'வில் நடிக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால், கதை ரைட்ஸ், வேறு சில காரணங்களுக்காக அந்த படம் தொடங்கப்படவில்லை. 'வட சென்னை 2'வில் தனுஷ் நடிக்கப்போகிறார். நான் தயாரிக்கப்போகிறேன் என்று தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அறிவித்தார். இந்நிலையில், சிம்பு நடிக்கும் புதுப்பட அறிவிப்பை எஸ்.தாணு வெளியிட்டார். வெற்றிமாறன் இயக்கும் இந்த பட தலைப்பு 'அரசன்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !