3 ஹீரோக்கள் இணையும் படம்
ADDED : 52 minutes ago
'மத கஜ ராஜா' வெற்றிக்குபின் சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் விஷால் இணைவதாக இருந்தது. ஆனால், சம்பளம், பட்ஜெட் காரணமாக அந்த படத்தொடக்கம் தள்ளிப்போனது. 'மூக்குத்தி அம்மன் 2'வுக்கு சென்றார் சுந்தர்.சி. 'மகுடம்' படத்தில் நடிக்க சென்றார் விஷால். இப்போது இருவர்கள் இணைவது உறுதியாகிவிட்டது. இந்த படங்களை முடித்தபின் இவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். விஜய்ஆண்டனி படத்துக்கு இசையமைக்கிறார்.
சுந்தர்.சி, விஜய்ஆண்டனி இரண்டுபேருமே ஹீரோக்களாக நடித்தவர்கள். இவர்கள் விஷால் படத்தில் இணைவதால், அந்த படம் 3 ஹீரோக்கள் பணியாற்றும் படமாக இருக்கிறது. 'நுாறுசாமி' உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் விஜய்ஆண்டனி, நண்பர்கள் கேட்டால் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். சுந்தர்.சி, விஷால் இணையும் படம் 'மதகஜராஜா 2'வாக இருக்குமா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.