உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை

பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை

1986ம் ஆண்டு வெளிவந்த 'கோடை மழை' படம் பற்றி பலருக்கு தெரியாது. ஆனால் அதில் நடித்த 'கோடை மழை வித்யா'வை தெரியும். சுனிதா என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோடை மழையில் வித்யா என்ற கேரக்டரில் நடித்ததால் அந்த பெயராலேயே சினிமாவில் அறியப்பட்டார். பத்மினி, ராகினி, ஷோபனா வரிசையில் நடனத்திற்காக அதிகம் அறியப்பட்ட நடிகை வித்யா.

11 வயதில் இவரது பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. அந்த நடன நிகழ்ச்சிக்கு இயக்குனர் முக்தா சீனிவாசன் வந்திருந்தார். அப்போது அவர் 'கோடை மழை' படத்தை இயக்கும் யோசனையில் இருந்தார். பரதநாட்டியத்தை அடிப்படையாக கொண்ட அந்த படத்திற்கு இவர்தான் சரியான தேர்வு என்று வித்யாவை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

ஆனால் சினிமாவில் நடிப்பதற்கு வித்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது நடனம் தொடர்பான படம் என்று புரிய வைத்து சம்மதம் பெற்றனர். ஒரு படத்தோடு சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்ற நிபந்தனையோடு நடிக்க வந்தவர். பின்னாளில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆனார்.

முதல் படத்திலேயே லட்சுமி, ஸ்ரீப்ரியா என சீனியர் நடிகைகளுடன் நடித்தார். 11 வயதிலேயே நடிக்க வந்து விட்டதால் முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்தாலும் தங்கை, மகள் கேரக்டரிலேயே அதிகம் நடித்தார். பிற்காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

பின்னர் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வித்யா அமெரிக்காவில் செட்டிலாகி அங்கு நடன பள்ளி நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !