ரஜினி பெயரில் புதிய படம்
ADDED : 1 hours ago
மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் ஜெயின்ராஜ் தயாரிக்கும் படம் 'ரஜினி கேங்'. 'பிஸ்தா' திரைப்படம் மற்றும் 'உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்குகிறார்.
ரஜினி கிஷன் நாயகனாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். ஜோன்ஸ் ரூபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார், எம்.எஸ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது என்றார்.