உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலி சாமியாராக நட்டி

போலி சாமியாராக நட்டி

நட்டி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'கம்பி கட்ன கதை'. ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். ஸ்ரீ ரஞ்சினி, சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன் நடித்துள்ளனர்.

இதில் நட்டி போலி சாமியாராக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் ராஜநாதன் கூறும்போது ''போலி சாமியார், காமெடி, ஏமாற்று வேலை இந்த மூன்று வேலையும் யாரால் செய்யமுடியும்? என்று யோசித்தபோது, உடனடியாக எங்கள் மனதுக்குள் வந்தவர் நட்டி. அவரை தவிர யாரும் இதை செய்யமுடியாது என்பதால் அவரை போராடி நடிக்க வைத்தோம் என்றார்.

நட்டி கூறும்போது, ''சினிமாவில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக நடிக்க வேண்டும். அப்படித்தான் செயலாற்றி வருகிறேன். போலி சாமியாராக நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமே என்கிற மகிழ்ச்சிதான் உள்ளது. என்னை பொறுத்தவரை சினிமாவுக்காக எதையும் செய்யலாம். தொடர்ந்து முழு உழைப்பையும் சினிமாவுக்கு தருவேன்'', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !