உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு

புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.

புதுச்சேரியில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்கவும், படப்பிடிப்பு இடம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் கோரிக்கை வைத்தனர்.

இந்த சந்திப்பில் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் இணை செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எம். கபார், அன்புதுரை செந்தாமரை கண்ணன், ஜோதி, கமலகண்ணன், பன்னீர்செல்வம், கருணாகரன், ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !