திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல்
ADDED : 92 days ago
நடிகை திரிஷா, 42, முன்னணி நடிகையாக உள்ளார். இன்னும் திருமணம் செய்யவில்லை. இடையில் வருண் மணியன் என்பவருடன் நடக்க இருந்த திருமணம் நின்றது. தற்போது சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இவர் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. இரண்டு குடும்பத்தினரும் நீண்ட நாட்களாகவே நட்பில் உள்ளார்களாம்.
இதுபற்றி திரிஷா தரப்பில் விசாரித்தபோது ‛அந்த தகவல் உண்மையில்லை' என்றனர். இதனிடையே இன்ஸ்டாவில் திரிஷா வெளியிட்ட பதிவில், ‛‛என் வாழ்க்கையை பற்றி மக்கள் முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்படியே ஹனிமூன் செல்வதை பற்றியும் சொன்னால் நல்லது'' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.