உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி

கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட திரை உலகை தாண்டி தென்னிந்திய அளவிலும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இதனைத் தொடர்ந்து தமிழில் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்த இவர் இந்த வருடம் நானியின் நடிப்பில் தெலுங்கில் வெளியான ஹிட் 3 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‛தெலுசு கத' திரைப்படம் வரும் அக்., 14ம் தேதி தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக சித்து ஜொன்னலக்கட்டா நடிக்க, ராஷி கண்ணா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். நீரஜா கோனா இயக்கியுள்ளார்.

தனது கதாபாத்திரம் பற்றி ஸ்ரீநிதி ஷெட்டி கூறும்போது, “இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும் எனது இயல்பான குணாதிசயத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. காரணம் இதில் நெகட்டிவ் சாயல் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதேசமயம் அந்த கதாபாத்திரத்தின் பக்கம் நல்ல விஷயங்களும் உண்டு. படம் பார்க்கும் ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தில் தன்மை குறித்து தீர்மானித்துக் கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !