உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு

27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு இந்த வருடம் குபேரா, கூலி என இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் வில்லனாக மற்றும் முக்கிய கதாபாத்திரமாக தான் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அவரது நூறாவது படம் தற்போது துவங்கி உள்ளது. இந்த படத்தை தமிழில் நித்தம் ஒரு வானம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ரா கார்த்திக் இயக்குகிறார்.

இதில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 90களில் தெலுங்கில் நாகார்ஜூனா, தபு ஜோடி ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்ற ஜோடி. குறிப்பாக இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியது. அந்த வகையில் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு நாகார்ஜூனாவின் இந்த நூறாவது படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !