உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல்

நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல்

சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ஜீவன் நடித்த நான் அவன் இல்லை திரைப்படம் வெளியானது ஞாபகம் இருக்கும். வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த ஒரு இளைஞனை மையப்படுத்தி அந்த படம் உருவாகி இருந்தது. அதேசமயம் ஒரே பெண் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த நிகழ்வுகளும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்த திரைப்படங்கள் அவ்வளவாக வந்தது இல்லை. இந்த நிலையில் மலையாளத்தில் நான் அவள் இல்லை என சொல்லும் விதமாக அப்படி ஒரு கதை அம்சத்துடன் ‛பெண்ணு கேஸ்' என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தில் இப்படி பல்வேறு ஆண்களை திருமணம் மோசடி செய்து ஏமாற்றும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை நிகிலா விமல். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரை பார்க்கும்போது மருதமலை படத்தில் வடிவேலுவிடம் ஒரு பெண் தங்களை ஏமாற்றி விட்டதாக நான்கைந்து பேர் வந்து கூறுவார்கள் இல்லையா, அதே பாணியில் தான் தான் இந்த டீசரும் உருவாகியுள்ளது நிச்சயமாக படம் முழுக்க காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை இந்த டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இயக்குனர் பெபின் சித்தார்த் இயக்கியுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !