உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு

ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு

இந்தியத் திரையுலகத்தின் தனிப் பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போதும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டில் இளையராஜா இசையமைத்து தமிழில் “தினசரி, ஸ்கூல், பேரன்பும் பெருங்கோபமும், படைத் தலைவன், திருக்குறள்” ஆகிய படங்களும், தெலுங்கில், 'சஷ்டி பூர்த்தி' படமும் வெளிவந்துள்ளன.

நேற்று இளையராஜா இசையமைத்து வரும் இரண்டு படங்களின் இசை வெளியீடு காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடந்தது. காலையில், அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா க்ரூப் மற்றும் பலர் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை வெளியீடும், மாலையில், அரவிந்தராஜ் இயக்கத்தில் ஜேஎம் பஷிர் நடிக்கும் 'தேசிய தலைவர்' படத்தின் இசை வெளியீடும் சென்னையில் நடைபெற்றது.

இரண்டு நிகழ்வுகளிலும் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்றாலும், 'தேசிய திலைவர்' படத்தின் இசை வெளியீட்டை அதற்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் நடத்தி இருக்கிறார்கள். இளையராஜா இசையை வெளியிட தயாரிப்பாளர் தாணு, நடிகர் பிரபு அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்கள் இளையராஜாவின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !