உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி

ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி


கடந்த 2017ல் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதனை தொடர்ந்து அதே வருடத்தில் மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் கதாநாயகியாக இவர் நடித்தார். குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்று பிரபலமான 'ஜிமிக்கி கம்மல்' பாடல் மூலம் இவர் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது பெரிய அளவில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கு காரணம் அவரது உடல் எடை அதிகரிப்பு தான். இதன் காரணமாக அவர் சோசியல் மீடியாவில் பலமுறை ட்ரோல்களுக்கும் ஆளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீடியோ என சில டீப் பேக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகின. இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அது தனது டீப் பேக் வீடியோ என்பதையும் எது தன்னுடைய ஒரிஜினல் புகைப்படம் என்பதையும் பதிவிட்டு, “தயவு செய்து என்னுடைய டீப் பேக் புகைப்படங்களையும் வீடியோக்களையும் யாரும் பகிர வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தன்னுடைய ஒரிஜினல் புகைப்படம், வீடியோக்களை விட டீப் பேக் வீடியோக்களுக்கு அதிகம் வியூஸ், லைக்ஸ் வருகிறது. இது எந்த மாதிரியான மனநிலை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !