உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி

மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட் படங்கள் சமீபகாலமாக தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அதிலும் வெற்றியை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 2001ல் அவர் இரண்டு வேடங்களில் நடித்த 'ராவண பிரபு' திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியானது. இப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக வசுந்தரா தாஸ் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை வசுந்தரா தாஸ் ராவண பிரபு படத்தின் ரீலீஸ் குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “இந்த படத்தின் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது நான் 'சிட்டிசன்' படத்தில் பிஸியாக நடித்து வந்தேன். அந்த சமயத்தில் இந்த படத்தை ஏற்கலாமா வேண்டாமா என தயங்கினேன். ஆனால் இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தில் நான் நடித்திருந்த அந்த ஜானகி கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக உருவாக்கி இருப்பதாகவும் நீங்கள் தான் நடித்தாக வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார். இத்தனைக்கும் என்னை நடிக்க வைக்க வேண்டாம் என்றும் கூட அவரிடம் சிலர் கூறியிருந்தனர்.

அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு தான் என்னை அவர் நடிக்க அழைத்தார். அதனாலயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படம் வெளியான பிறகு தான் அந்த படம் எனக்கு எவ்வளவு பெயரை பெற்று தந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. நான் இப்போது உலகத்தில் எங்கே சென்றாலும் என்னை யாராவது பார்த்து நீங்கள் வசுந்தராதாஸ் தானே என்று கேட்டு அடுத்த நொடி அவர்கள் நாங்கள் மலையாளத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லும் போது, ராவணப் பிரபு திரைப்படம் என்னை அவர்களிடம் எவ்வளவு நெருக்கமாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !