3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது?
ADDED : 108 days ago
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. குறிப்பாக இதற்கு முன்பு, தான் நடித்த 'பாட்ஷா, சந்திரமுகி' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் கூட நடிக்க மறுத்த ரஜினி, இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர்-2 படப்பிடிப்பின்போது மீண்டும் ரஜினி இடத்தில் ஒரு கதை சொல்லி இருக்கிறாராம் நெல்சன். அந்த கதையும் ரஜினிக்கு பிடித்து விட்டதாம். அதனால் ஜெயிலர்-2வுக்கு பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணி இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.