உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா!

மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா!


தமிழில் ஜீவாவுடன் நடித்த 'அகத்தியா' படத்திற்கு பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாத ராஷி கண்ணா தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக 'உஸ்தாத் பகத்சிங்' என்ற படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, அடுத்து 'தெலுசுகட' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு 3 புதிய ஹிந்தி படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டில் 'மெட்ராஸ் கபே' என்ற ஹிந்தி படத்தில் தான் அறிமுகமானார் ராஷி கண்ணா. ஆனால் அதன் பிறகு ஹிந்தியில் பட வாய்ப்புகள் இல்லாமல் தென்னிந்திய சினிமாவுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !