உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12

10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12


கன்னடத்தில் நடிகர் சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12, சமீபத்தில் ஆரம்பமானது. பெங்களூருவில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதனிடையே, அந்த ஸ்டுடியோவில் சுற்றுப்புறச் சூழல் விதிகளை கடைபிடிக்கவில்லை என கர்நாடகா மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டுடியோவிற்கு சீல் வைத்தது. அதனால், பிக்பாஸ் போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதன் பின் நடிகர் சுதீப், கேட்டுக் கொண்டதன் பேரில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் சீலை அகற்ற உத்தரவிட்டார். அதையடுத்து 10 நாள் அவகாசம் கொடுத்து நிகழ்ச்சியைத் தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நின்று போய்விடுமா என்ற அச்சத்தில் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு சற்றே ஆறுதல் கிடைத்தது.

10 நாட்களுக்குள் அந்த அரங்கில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி மாற்றி அமைக்க வேண்டும். அதை வாரியம் மேற்பார்வை செய்யும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் கன்னட திரையுலகம் மற்றும் டிவி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !