கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா?
ADDED : 100 days ago
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முக்கியமான ஹீரோ படங்கள் வரவில்லை. ஆனால் இவர்கள் படங்களின் அப்டேட் வர வாய்ப்பு என கூறப்படுகிறது.
விஜயின் 'ஜனநாயகன்', சூர்யாவின் 'கருப்பு', கார்த்தியின் 'வா வாத்தியார்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்களின் ஸ்பெஷல் போஸ்டர், மற்ற பெரிய ஹீரோக்களின் படம் சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் 'ஜெயிலர் 2' போஸ்டரும் வெளியாக வாய்ப்பு. சில படங்களின் டீசர், பாடல்களையும் வெளியிட வேலைகள் நடக்கிறது. கமல், அஜித் புதுப்பட அறிவிப்பு வருமா என்பது மட்டும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.