தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள்
இந்த வருடம் தீபாவளிக்கு ஆச்சரியமாக முன்னணி வரிசை ஹீரோக்களின் படங்கள் எதுவுமே வெளியாகாத நிலையில் தமிழில் டியூட், பைசன், டீசல் என இளம் ஹீரோக்களின் மூன்று படங்கள் வெளியாகின்றன. அதேபோல தமிழில் ஒவ்வொரு தீபாவளிக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வந்ததால் அந்த சமயத்தில் மலையாளத்தில் பெரும்பாலும் எந்த படங்களும் ரிலீஸ் ஆகாமல் தமிழ் படங்களே அங்கேயும் ரிலீஸ் ஆகின. ஆனால் இந்த வருடம் இங்கே நிலைமை மாறியதால் மலையாளத்திலும் கிட்டத்தட்ட மூன்று படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகின்றன..
அந்த வகையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் வெளியாகும் பைசன் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் பெட் டிடெக்டிவ் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவற்றில் பெட் டிடெக்டிவ் இன்று வெளியாகிறது.
கடந்த ஜூலையில் மலையாளத்தில் ஜேஎஸ்கே, ஆகஸ்டில் தெலுங்கில் பர்தா, செப்டம்பரில் கிஷ்கிந்தாபுரி என அனுபமா பரமேஸ்வரனின் படம் மாதத்துக்கு ஒன்று ரிலீசாகி வருகிறது, அனேகமாக இந்த வருடம் அதிக படங்களில் நடித்தவர் என்கிற பெருமை அவருக்கு தான் சொந்தமாக போகிறது.