இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 44 minutes ago
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். அசுரன், விடுதலை 2, வாத்தி போன்ற படங்களில் நடிகராக நடித்து பிரபலமானவர். சமீபத்தில் இவர் இயக்குனர் ஆக போவதாக நாம் தெரிவித்திருந்தோம். தற்போது கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கின்றார். இந்த படத்தை பார்வதா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் அடுத்த அப்டேட் அக்டோபர் 18ந் தேதியன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர். இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகும் ஒரு ஜாலியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.