நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி
ADDED : 31 minutes ago
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, நடிகை அமலா அக்கினேனி தம்பதியினர் 33 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது பிரபல தமிழ் நாளிதழுக்கு அமலா அக்கினேனி அளித்த பேட்டி ஒன்றில் அவர் நாகார்ஜூனா குறித்து கூறியதாவது, கூலி படத்தில் அவரின் ஸ்டைல், பிட்னஸ், அழகைப் பார்த்து அசந்துபோய் கைதட்டிய ரசிகைகளில் நானும் ஒருவர். அவரும், நானும் ரொமான்டிக் ஜோடி தான். அதனால் தான் மற்றவர்கள் பார்வைக்கு நாங்கள் இளமையான ஜோடியாக தோன்றுகிறமோ என்னவோ..? என் சந்தோஷத்தைப் பார்த்தே நீங்கள் நாகார்ஜூனா சார் என்னை எப்படிப் பார்த்துக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம் . ஆனால், நான் அவரை எப்படிப் பார்த்துக்கிறேன் என்று நாகார்ஜூனா சார் கிட்ட தான் நீங்கள் கேட்டுச் சொல்லணும். இவ்வாறு கூறினார்.