உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல்

எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல்

பொழுது போக்கிற்கானது திரைப்படம் என்பதை தன் பாடல்களால் பொருள் நிறைந்ததாக மாற்றியவர் கண்ணதாசன். அனைத்து மத கடவுள்கள், சரித்திர நாயகர்கள், புராண இதிகாச வேந்தர்கள், மாந்தர்களை இவரது பாடல்கள் நம் கண் முன் கொண்டு வந்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் நாதம் என்றால், கண்ணதாசன் கீதம். கே.வி.மகாதேவன் தேவராகம் என்றால், கண்ணதாசன் தேவகானம். இம்மூவேந்தர்களின் காலம் தமிழ் திரைக்கு மட்டுமல்ல; தமிழ் மொழியின் பொற்காலமும் கூட.

கண்ணதாசனின் நினைவு நாள் இன்று(அக்., 17) இதுதொடர்பாக நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும். எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள். என்றென்றும் உங்கள் நான்'' என குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல், கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும் ‛கண்ணே கலைமானே...'' பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !