சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா
அலை, கேங் லீடர், யாவரும் நலம், மனம், 24 (சூர்யா படம்) போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கி பெயர் பெற்றவர் விக்ரம் குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக 2022ம் ஆண்டில் 'தேங் யூ' படம் வெளியானது. இந்த படம் தோல்வி அடைந்ததால் அதன்பின் விக்ரம் குமாரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த சில மாதங்களாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் நடிகர் நிதினை வைத்து விக்ரம் குமார் படம் இயக்குவதற்காக பேச்சுவார்த்தையில் உள்ளார் என செய்தி வெளியானது, ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் நிதினுக்கான கதையை விக்ரம் குமார் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவும் இந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்து கூடுதலாக இந்த படத்தை தயாரிக்க யு.வி கிரியேஷன்ஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.