உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு?

அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு?

அஜித் நடித்து இந்த வருடத்தில் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'விடாமுயற்சி' எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், 'குட் பேட் அக்லி' படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.

'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து அஜித் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும் அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அஜித் தொடர்ந்து கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு வருவதால் அறிவிப்பு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

இந்நிலையில் தீபாவளி தினத்தன்று அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியான பின்பு சில வாரங்களில் படப்பிடிப்புக்குச் செல்வார்கள் என்றும் தெரிகிறது.

ஒரு இயக்குனருடன் பணிபுரிந்து அவரைப் பிடித்துவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது அஜித் வழக்கம். அப்படித்தான் ஆதிக்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !