முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்'
ADDED : 4 minutes ago
2025 தீபாவளியை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாக நேற்று அக்டோபர் 17ம் தேதியே ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில், 'பைசன், டீசல், டியூட்' ஆகிய படங்களுக்கு இடையில்தான் போட்டி. இளம் ரசிகர்கள் இந்தப் படங்களைத்தான் பார்க்க விரும்புகிறார்கள்.
விமர்சன ரீதியாக 'பைசன்' படம் முதலிடத்தில் இருக்கிறது. வசூல் ரீதியாக முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் 'டியூட்' படம் தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து 10 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் விமர்சனங்களுக்குப் பிறகு 'பைசன்' படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்புள்ளது. 'டீசல்' படத்திற்கான விமர்சனமும், வரவேற்பும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
மற்ற இரண்டு படங்களான 'கம்பி கட்ன கதை' படத்தின் வசூல் குறிப்பிடும்படி இல்லை. 'பூகம்பம்' என்ற படம் ஒரு சில காட்சிகள் மட்டுமே ஓடுகிறது.