எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த்
ADDED : 47 minutes ago
தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ரிஷப் ஷெட்டியுடன் அவர் நடித்து தற்போது திரைக்கு வந்துள்ள காந்தாரா சாப்டர்-1 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக இவர் உயர்ந்துள்ளார். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் டிராகன், யஷ் நடிக்கும் டாக்சிக் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்மணி வசந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை மிகவும் கவர்ந்த ஹீரோவாக தெலுங்கு நடிகர் நானியை குறிப்பிட்டுள்ளார். காரணம் அவரது நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும். அதனால் அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் ருக்மணி வசந்த்.