உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான்

கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்று சாதனை புரிந்தவர். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற சர்வதேச விருதுகளையும் வென்றவர். தொழில்நுட்பம் மாற மாற தனது இசையிலும் பல புதுமைகளை செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது டிரெண்ட்டாகவும் எதிர்கால தொழில்நுட்பமாக பார்க்கப்படும் ஏஐ தொழில்நுட்பத்திலும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் உடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தில் இசைக்குழுவை அமைக்கிறார் ரஹ்மான். இதற்கு ‛சீக்ரெட் மவுண்ட்டேன்' என பெயரிட்டுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசை ஆல்பம் இருக்குமாம். வியோ 3, இமேஜென், ஜெமினி பிளாஷ், ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை இந்த திட்டத்தில் பயன்படுத்த இருக்கின்றனர்.

‛‛இது கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்களின் முழுமையான கொண்டாட்டமாக இருக்கும்'' என்கிறார் ரஹ்மான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !