உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு

3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு


கடந்த வருடம் தமிழில் வெளியான 'தங்கலான்' மற்றும் மலையாளத்தில் வெளியான 'உள்ளொழுக்கு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை பார்வதி. தற்போது அவர் மலையாளத்தில் 'பிரதம திருஷ்ய குற்றக்கார்' மற்றும் 'ஐ நோபடி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'ஐ நோபடி' படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார் பார்வதி. இந்த படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். கடந்த 2018ல் வெளியான மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்களில் பிரித்விராஜுடன் இணைந்து நடித்திருந்த பார்வதி ஏழு வருடங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி நடித்த ரோஷாக் படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இன்று படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பார்வதி, “மனித கதைகளை சொல்ல ஒன்றிணையும் குழுக்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நான் ஒருபோதும் நிராகரித்தது இல்லை.. ஐ நோபடி படப்பிடிப்பு தளத்தில் என்ன ஒரு நெகிழ்ச்சியான கடைசி நாள்.. கட்டாயம் சொல்லப்பட வேண்டிய இந்த கதையை தயாரித்ததற்காக அதில் என்னை ஒரு அங்கமாக மாற்றியதற்காக தயாரிப்பாளர் சுப்ரியா பிரித்விராஜுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !