உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ்

நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் அதர்ஸ். இதில் நாயகியாக கவுரி கிஷன் நடித்துள்ளார். மருத்துவ பின்னணியில் குழந்தை பிறப்பை வைத்து கிரைம் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிராண்ட் பிக்சர்ஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 7ந் தேதியன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !