உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை!

அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை!


'பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள நான்காவது படம் 'இட்லி கடை'. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சத்யராஜ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

கிராமத்துக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தந்தையின் தொழிலான இட்லி கடை நடத்தும் கதையை மையப்படுத்தி உருவாகியிருந்தது. உணர்வுபூர்வமான காட்சிகள் இடம் பெற்ற இந்த படம் 70 கோடி வரை வசூலித்தது. தீபாவளி படங்கள் கடந்த 17ம் தேதி வெளியானதை அடுத்து இந்த இட்லி கடை பணத்தின் வசூல் சுத்தமாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது இப்படம் அக்டோபர் 31ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !