ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன்
ADDED : 6 minutes ago
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்தவாரம் வெளியான படம் ‛டியூட்'. விமர்சன ரீதியாக சில முரண்பாடுகள் இருந்தாலும் இளையோர் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 6 நாட்களில் இப்படம் உலகம் அளவில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
‛கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப், அடுத்து ‛லவ்டுடே' படத்தை இயக்கி, அதில் ஹீரோவாக நடிக்கவும் செய்தார். இந்தப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்தது. தொடர்ந்து இந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான டிராகன் படமும் 150 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்போது டியூட் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார் ஆச்சர்யப்படுத்தி உள்ளார் பிரதீப்.