உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது!

சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது!


விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த 'குஷி' படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் தயாரித்த 'சுபம்' என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சமந்தா. அதன் பிறகு வெப் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் ஏற்கனவே தன்னை வைத்து 'ஓ பேபி' என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கப் போவதாக கூறி வந்தார் சமந்தா. அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் சொன்னது போலவே நந்தினி ரெட்டி இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. அதில் சமந்தா பங்கேற்று நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !