உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்!

பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்!


தெலுங்கு நடிகரான சர்வானந்த் தமிழில், ‛நாளை நமதே' என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ‛எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் ‛பைக்கர்' என்ற படத்தில் பைக் ரேஸராக அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது சர்வானந்தின் 36வது படமாகும்.

இந்த படத்தில் நடிக்கும் பைக் ரேஸர் வேடத்திற்காக பல மாதங்களாக உணவுக்கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் உடல் கட்டுக்கு மாறியுள்ளார் சர்வானந்த். அது குறித்த புகைப்படங்களையும் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !