உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல்

கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல்


மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ஆக்சன் ஹீரோ ‛பைஜூ' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்பியவர் இப்போது வரை இன்னொரு மலையாள படத்தில் நடிக்கவே இல்லை. தமிழில் ‛துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை, ஜப்பான்' ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கில் ஓரளவு அதிக படங்களில் நடித்திருக்கிறார். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனு இம்மானுவேல். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 7ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தை தான் மலை போல் நம்பி இருக்கிறார் அனு இம்மானுவேல். இந்த படம் வெளியான பிறகு தெலுங்கில் மீண்டும் தனக்கு வாய்ப்புகள் தேடி வரும் என நம்புகிறாராம் அனு இம்மானுவேல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !