உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தி கேர்ள் ப்ரெண்ட்' படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த ராஷ்மிகா

‛தி கேர்ள் ப்ரெண்ட்' படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த ராஷ்மிகா

கடந்த தீபாவளிக்கு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தம்மா என்ற ஹிந்தி படம் வெளியானது. அதையடுத்து ‛தி கேர்ள் பிரண்ட்', ‛மைசா' போன்ற தெலுங்கு படங்களும், ஹாக்டெய்ல் 2 என்ற ஹிந்தி படமும் அவர் கைவசம் உள்ளது. இதில், தி கேர்ள் பிரண்ட் படம் வருகிற நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் கதை அவரை பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்து விட்டதாம். அதனால் இப்படியொரு கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தை பெருமையாக கருதுகிறேன் என்று சொல்லி இந்த படத்தில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் ராஷ்மிகா. என்றாலும் இப்படம் திரைக்கு வந்த பிறகு அவருக்கான சம்பளத்தை வற்புறுத்தியாவது கொடுத்து விடுவோம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !