உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் நடிக்கும் கார்த்தி?

சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் நடிக்கும் கார்த்தி?

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தற்போது, 'மன சங்கர வரபிரசாத் காரு' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு பாபி இயக்க உள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'வால்டர் வீரய்யா' படத்திற்குப் பிறகு பாபி - சிரஞ்சீவி கூட்டணி இணையப் போகும் படம் அது.

அப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் நடிகரான கார்த்தி நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கார்த்திக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க ஒரு வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே, நாகார்ஜுனாவுடன் இணைந்து 'ஊபிரி' படத்தில் நடித்திருந்தார். 'ஹிட் 3' படத்தின் முடிவில் வரும் கார்த்தி, 'ஹிட் 4' படத்திலும் நடிக்க உள்ளார்.

'வால்டர் வீரய்யா' படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா நடித்திருந்தார். அது போல இயக்குனர் பாபி அடுத்த படத்திலும் சிரஞ்சீவியுடன் மற்றுமாரு ஹீரோவை நடிக்க வைக்க உள்ளார். அதுவும் அந்தப் படம் போலவே வெற்றியை பெற்றுத் தரும் என்ற சென்டிமென்ட்டையும் முன் வைக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !