'ஜெயிலர் 2' படத்தில் வித்யாபாலன்?
ADDED : 1 days ago
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யாபாலன். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டியவர். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்தில் நிராகரிக்கப்பட்டவர். அதன்பின் ஹிந்திக்குப் போய் அங்கு பல படங்களில் நடித்து தனி இடத்தைப் பிடித்தவர்.
தமிழில் முதன் முதலாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் முக்கிய வில்லனான மிதுன் சக்கரவர்த்தியின் மகளாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. தற்போது இப்படத்தின் டப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.
அடுத்த வருட கோடை விடுமுறையில் 'ஜெயிலர் 2' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.