உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில்

ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில்

ரியோ ஜோடியாக ஜோ படத்தில் நடித்த மலையாள நடிகை மாளவிகா மனோஜ் தான், ரியோவின் அடுத்த படமான ‛ஆண்பாவம் பொல்லாதது' படத்திலும் ஹீரோயின். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் உங்க கணவர் ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று ரியோ மனைவி ஸ்ருதியிடம் கேட்கப்பட்டபோது, அவரும் மாளவிகா மனோஜ் என்று பதில் அளித்தார். அந்த அளவுக்கு ரியோவுக்கு பிடித்தமானவராக இருக்கிறார்.

ஒவ்வொரு ஹீரோயின்களுக்கும் ஒரு தனித்திறமை உண்டு. கேரளாவை சேர்ந்தவர் என்பதால் மாளவிகா, செண்டை மேளம் வாசிப்பதில் கில்லாடியாம். ஆண்பாவம் பொல்லாதது பட பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் செண்டை மேளம் வாசித்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை உடனே படத்தில் புக் பண்ணவில்லை. அந்த கேரக்டர் வலுவானது. ஹீரோவுக்கு நிகராக நிறைய டயலாக் பேசணும். அதனால், ஆடிசன் வைத்து, டயலாக் பேச வைத்து செக் செய்தபின்னரே அவரை நடிக்க வைத்தோம். மாளவிகா தானே டப்பிங் பேசியிருக்கிறார் என்கிறார்கள் படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !