உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன்

ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன்

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன் நடித்து திரைக்கு வந்த படம் டூரிஸ்ட் பேமிலி. 7 கோடியில் தயாரான இப்படம் 90 கோடி வசூலித்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தி லாஸ்ட் ஒன் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சிம்ரன். லோகேஷ் குமார் இயக்கும் இந்த படத்தை சிம்ரனின் கணவர் தீபக் பாஹ்ஹா தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று ரெட் லேபிள் என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார் சிம்ரன். கே.ஆர்.வினோத் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில், லெனின், அஷ்மின், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோயமுத்தூர் பின்னணியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கொலை சம்பந்தப்பட்ட மர்மமான கதையில் ரெட் லேபிள் படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !