பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி
வளர்ந்துவிட்ட எல்லா காமெடி நடிகர்களுமே ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பார்கள். ஆனால் அதனை அவர்களால் தொடர முடியாமல் மீண்டும் காமெடியனாகி விடுவார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் சமீபத்தில் ஹீரோவாகியிருக்கும் சூரி வரை இது பொருந்தும்.
இதில் கவுண்டமணி மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா. காமெடியனாக நடித்தாலும் ஹீரோவுக்கு இணையான சம்பளத்துடன் நட்சத்திர காமெடியனாக கவுண்டமணி வலம் வந்தபோது அவர் நாயகனாக நடித்த முதல் படம் 'பிறந்தேன் வளர்ந்தேன்'.
விஜயசிங்கம் என்ற புதுமுகம் இயக்கிய இந்த படத்தில் கவுண்டமணி ஜோடியாக ஜீவிதா நடித்தார். இவர்களுடன் எஸ்.வி.சேகர், ராஜீவ், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர்.
இந்த படம் வெற்றிபெறவில்லை, என்றாலும் ‛பணம் பத்தும் செய்யும், கிளி ஜோசியம்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் நகைச்சுவை பாதைக்கே திரும்பினார். தனது ரீ எண்ட்ரியில் 'ஒத்த ஓட்டு முத்தையா', '49 ஓ' படங்களில் ஹீரோவாக நடித்தார். அவைகளும் வெற்றி பெறவில்லை.