‛தனுஷ் 54'ல் நடக்காதது 55ல் நடந்தது
 
நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவரது 54வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக நடிக்க முதலில் நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு நடைபெற்றது. இறுதியில் மலையாள நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆனார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 
கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. தனுஷின் 54வது படத்தில் கிடைக்காத வாய்ப்பு ‛தனுஷ் 55'ல் கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் பூஜா ஹெக்டே.