உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி

2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி


‛ஆர்ஆர்ஆர்' படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமலிக்கு தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் கதை, காட்டை மையப்படுத்திய கதையாக உருவாகி வருகிறது. அதே சமயம் இயக்குனர் ராஜமவுலியை பொருத்தவரை மகாபாரதத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ராஜமவுலி, மகேஷ்பாபு மற்றும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு இடையே சுவாரசியமான உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

அதில் மகேஷ்பாபு இயக்குனர் ராஜமவுலியிடம், “சார்.. இப்போதே நவம்பர் ஆகிவிட்டது” என்று சொல்கிறார். உடனே ராஜமவுலி, “அப்படியா இந்த மாதம் எந்த படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுத போகிறீர்கள் ?” என்று கேட்க, “சார் நான் அதைச் சொல்லவில்லை.. மகாபாரதம் படத்தை பற்றிய அப்டேட் எதுவுமே நீங்கள் கொடுக்கவில்லை. அதுபற்றி கேட்டேன்” என்கிறார். “அது இப்போதுதான் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கிறது மகேஷ்” என்று ராஜமவுலி கூற, “இவ்வளவு மெதுவாக ஏன் சார்..? அட்லீஸ்ட் 2030லாவது அதை நாம் துவங்குவோமா ?” என்று கேட்டுள்ளார் மகேஷ்பாபு.

அவருக்கு ராஜமவுலி, “அது சர்ப்ரைஸ்” என்று கூற, “சர்ப்ரைஸா..? எது, பிரித்விராஜ் ஒரு சர்ப்ரைஸ் என நீங்கள் காட்டியது போலவா?” என்று கேட்கிறார். இதற்கிடையில் இடையில் புகுந்து பதில் அளித்த பிரித்விராஜ், “ராஜமவுலி சார்.. நான் இங்கே ஹைதராபாத்தில் விடுமுறைக்காக வந்து தங்கியிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த விதமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை.. இதை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நான் கடைபிடித்தால் என்னுடைய குடும்பத்தினரே என்னை சந்தேகப்பட துவங்கி விடுவார்கள்” என்று தன் பங்கிற்கு ஜாலியாக கூறினார்.

உடனே ராஜமவுலி மகேஷ்பாபுவிடம், “நீங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டதால், உங்களுடைய பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒருவேளை தாமதப்படலாம்” என கூறினார். உடனே பிரித்விராஜ், “எனக்கு தெரியும் சார்.. நீங்கள் எப்போதுமே வில்லன்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்” என்று கூறியுள்ளார். இவர்களது இந்த உரையாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !